search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைனர் பெண் திருமணம்"

    தேனி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் மல்லயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பிரவீன்குமார். இவருக்கும் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி, குழந்தைகள் நல உறுப்பினர் பிரேமா விசாரணை நடத்தியதில் அந்த பெண் மைனர் என்பது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் பிரேமா புகார் அளித்தார்.

    போலீசார் மைனர் பெண்ணை திருமணம் செய்த பிரவீன்குமார், அவரது தந்தை மகேந்திரன், தாய் செல்லம்மாள் மற்றும் மைனர் பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 17 வயது மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று மைனர் பெண்ணை மீட்டார். தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

    இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைனர் பெண்ணை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் புஷ்பலதா, உறவினர் நவநீதகிருஷ்ணன், மைனர் பெண்ணின் பெற்றோர் முத்து புதியவன்-சுப்பு லட்சுமி, திருமண மண்டப உரிமையாளர் உத்திரபாண்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகர்கோவில் அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே உள்ள மணிக்கட்டி பொட்டலைச் சேர்ந்தவர் லிங்கம் (வயது 22). தொழிலாளி.

    இவருக்கும், சுசீந்திரம் குளத்தூர் காலனியைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். மணிக்கட்டிப் பொட்டலில் உள்ள தனது உறவிரை பார்க்க வந்தபோது லிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.

    இவர்களது காதல் விவகாரம் 2 பேருடைய பெற்றோருக்கும் தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். லிங்கம், அந்த பெண்ணின் பெற்றோரை நேரில் பார்த்து பெண் கேட்டார். ஆனால் அவர்கள் லிங்கத்துக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டனர்.

    இதனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் லிங்கமும், அந்த பெண்ணும் வீட்டை விட்டு வெளியேறினர். உவரியில் உள்ள கோவிலுக்கு சென்று அவர்கள் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் தனியாக குடும்பம் நடத்தினர்.

    இதில் அந்த பெண் கர்ப்பமானார். 9 மாத கர்ப்பிணியாக இருந்த அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு 16 வயதே ஆவதை உறுதி செய்தனர். மைனர் பெண் ஒருவர் கர்ப்பமானது தொடர்பாக அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார், 9 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணை அழைத்து விசாரித்தனர். பின்னர் மைனர் பெண்ணை திருமணம் செய்து கர்ப்பணியாக்கியதாக லிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    லிங்கத்தை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×